புதுடெல்லி:கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரலுக்கு(சி.ஏ.ஜி-மத்திய தணிக்கையாளர்) 2ஜி ஸ்பெக்ட்ரம் அனுமதி வழங்கல், பெட்ரோலிய துரப்பணத்தில் லாபத்தை பங்கீடுச்செய்தல் உள்ளிட்ட கணக்குகளை பரிசோதிக்கும் அதிகாரம் உண்டு என சி.ஏ.ஜியின் விநோத் ராய் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணா-கோதாவரி படுகையில்(கெ.ஜி-டி 6) இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வயல்களை கண்டுபிடிக்கவும் எண்ணை துரப்பணம் செய்யவும் ரிலையன்ஸ், கெய்ன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் சி.ஏ.ஜி நடத்திய தணிக்கை பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆதரவில்தான் நடந்தது.ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் பெட்ரோலிய நிறுவனங்களின் கருத்துக்களும் ஆராயப்பட்டன என சி.ஏ.ஜி விளக்கம் அளித்துள்ளது.தனியார் நிறுவனங்களுடன் அமைச்சகம் மூலமாகவே தொடர்புக்கொண்டோம் என ராய் தெரிவித்தார்.
தணிக்கை தொடர்பான நடவடிக்கைகள் முற்றிலும் சி.ஏ.ஜியின் வரம்பிற்கு உட்பட்டது எனவும், இதற்காக அமைச்சகத்தின் அனைத்து ஆவணங்களையும் பரிசோதிக்க சி.ஏ.ஜிக்கு உரிமை உண்டு எனவும் 2006-ஆம் ஆண்டு பெட்ரோலிய அமைச்சகத்திலிருந்து கிடைத்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக ராய் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:
Post a Comment