Sunday, July 3, 2011

மத்திய அரசுக்கு தகவல் உரிமை கமிஷன் கடும் கண்டனம்

right_to_information213
புதுடெல்லி:தகவல் உரிமை சட்டத்தின்(Right to Information Act) வரம்பிலிருந்து சி.பி.ஐக்கு விலக்கு அளித்த மத்திய அரசின் நடவடிக்கையை மத்திய தகவல் உரிமை கமிஷன் கடுமையாக விமர்சித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை குருட்டு நியாயத்தின் அடிப்படையில் உத்தரவுகளைப்போட்டு பலகீனப்படுத்த முடியாது என தகவல்  உரிமை தெரிவித்துள்ளது.

சட்டத்தின் அந்தஸ்திற்கு ஓவ்வாத நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது என தகவல் உரிமை கமிஷனர் ஷைலேஷ் காந்தி கூறியுள்ளார்.

ஊழல் தொடர்பான தகவல்களை கோரிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எல்.மிஷ்ராவின் மனுவை சி.பி.ஐ தள்ளுபடிச்செய்ததற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீடு விசாரணை நடைபெறும் வேளையில் மத்திய தகவல் உரிமை கமிஷன் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza