Monday, July 4, 2011

மொராக்கோ:அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு அங்கீகாரம்


ரபாத்:மொராக்கோவில் நான்கு நூற்றாண்டுகளாக தொடரும் மன்னர் ஆட்சியின் அதிகாரங்களை வெட்டிக்குறைத்து அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் கலந்துக்கொண்ட 98 சதவீதம் பேர் அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். விருப்ப வாக்கெடுப்பின் முடிவை அரசு சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

மொராக்கோவில் வாக்குரிமை பெற்ற 1.3 கோடி மக்களில் 78 சதவீதம் பேர் தங்கள் வாக்குரிமையை செலுத்தினர். நாட்டின் 40 ஆயிரம் வாக்கு சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

கடந்த ஜூன் 17-ஆம் தேதி மொராக்கோ மன்னர் 6-வது முஹம்மது அரசியல் சட்ட சீர்திருத்தம் குறித்து வாக்குறுதியளித்தார். மன்னரின் வாக்குறுதிகளில் பாலின சமத்துவம், நீதிபீடத்தின் சுயாட்சி ஆகியன முக்கியமானவையாகும். புதிய அரசியல் சட்ட சீர்திருத்தத்தின் அடிப்படையில் நாட்டின் தலைவர் மன்னர்தாம். அத்துடன் ராணுவம் மற்றும் நாட்டின் மத ஸ்தாபனங்களின் தலைமை பொறுப்பும் மன்னர் வசமிருக்கும். ஆனால், ஆட்சியின் தலைமை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பிரதமருக்கு ஆகும்.


1109068-1256969

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza