முஸாஃபர்பூர்:மும்பையில் குற்றங்கள் அதிகரிக்க காரணம் வட நாட்டை சார்ந்தவர்களின் குடியேற்றம் தான் என மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கையைக் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாக்கரே வட இந்தியர்களின் உணர்வை காயபடுத்தியுள்ளதாகவும்,அவமானித்துள்ளதாகவும் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் சுதீர் ஓஜா தாக்கரேவுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகினார்.இம்மாதம் 28-ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும்.

0 கருத்துரைகள்:
Post a Comment