இன்று காலை 7.00 மணி தொடக்கம் நடை பெற்றுவரும் வாக்களிப்பில் மக்கள் மிகவும் உச்சாகத்துடன் பங்குபற்றி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது துருக்கி பிரதமர் ரஜப் தையிப் அர்பகான் தலைமயிலான அரசாங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் செய்து வரும் பொருளாதார அபிவிருத்தி துருக்கியை உலகின் முன்னணி நாடாக உலக அரங்கில் நிறுத்தியுள்ளது.
நடைபெரும் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி எவரின் உதவியும் இன்றி துருக்கிய யாப்பை மாற்ற தமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தருமாறு மக்களிடம் கோரியுள்ளது நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சிகாலத்தில் துருக்கி பெரிதும் வளர்ச்சி கண்டுள்ளது உலகில் சீனாவுக்கு அடுத்ததாக மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதரத்தை கொண்ட நாடாக உருவெடுத்துள்ளதுடன் துருக்கியின் ஆள்வீத வருமானம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
துருக்கி பிரதமர் ரஜப் தையிப் அர்பகான் தலைமயிலான கட்சியின் வெற்றி இஸ்லாமிய உலகின் இஸ்லாமிய எழுச்சியின் ஒரு மையில் கல்லாக நோக்கப்படுகின்றது .ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற 367 ஆசனங்களை கைப்பற்றவேண்டும், அதாவது தற்போது உள்ள 341 ஆசனங்களை விடவும் மேலதிகமாக 26 ஆசனங்களை பெறவேண்டும் என்பது குறிபிடத்தக்கது.

0 கருத்துரைகள்:
Post a Comment