Thursday, June 9, 2011

இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்படவில்லை - அமெரிக்கா

 இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதாக தங்களுக்கு உறுதியாக எந்தத் தகவலும் வரவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆம் திகதி தெற்கு வசீரிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது. இந்தத் தாக்குதலை அமெரிக்கா ஆளில்லா ஏவுகணை மூலம் நடத்தியது. இல்யாஸ் காஷ்மீரி ஹர்கத்துல் ஜிஹாதல் இஸ்லாமி (HUJI) என்ற அமைப்பின் தலைவர் ஆவார்.

ஆனால் தற்போது காஷ்மீரி கொல்லப்பட்டதை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். தங்களுக்கு இது சம்பந்தமாக எந்தத்  தகவலும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். அமெரிக்கவிலிருந்து செயல்படும் தனியார் ஆய்வு மையமான SITE என்ற நிறுவனமும் இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதை மறுத்துள்ளது. இந்த நிறுவனம் தீவிரவாதிகளின் செய்திகள் மற்றும் அறிக்கைகளை ஆய்வு செய்து வரும் நிறுவனமாகும். இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதை தெரிவிக்கும் ஒரு தொலைநகலுடன் வந்த புகைப்படம் இல்யாஸினுடையது அல்ல என தெரிவித்துள்ளது.

 இது மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட அபு தேரா இஸ்மாயில் கானுடையது என தெரிவித்துள்ளது.மேலும் இந்த செய்தியை உறுதிப்படுத்தி HUJI இயக்கம் அனுப்பிய செய்தியும் பொய்யானது எனத் தெரிகிறது. இதுவரை எந்த விதமான ஊடக அறிக்கைகளையும் இந்த இயக்கம் அனுப்பியதில்லை.

 அனுப்பப்பட்ட செய்தியிலும் இந்த இயக்கத்தின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹர்கத்துல் ஜிஹாதல் இஸ்லாமி என்ற பெயர் ஒரு இடத்தில் ஹர்கத்தே ஜிஹாதல் இஸ்லாமி என்றும் மற்றொரு இடத்தில் ஹர்கத்தே ஜிஹாதே இஸ்லாமி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இல்யாஸ் காஷ்மீரி ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு நடைபெற்றத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தவறான தகவல் அப்போது வெளியானது.

 இல்யாஸ் காஷ்மீரி விஷயத்தில் பாகிஸ்தானும் அமெரிக்காவும் முரண்பட்டிருப்பதிலிருந்து ஒஸாமா பின் லேடன் அமெரிக்காவினால் கொல்லப்பட்ட பிறகு விரிசல் அடைந்த இரு நாடுகளுக்கிடையிலான உறவு இன்னும் சீராகவில்லை எனத் தெரிகிறது.இ

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza