சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, இன்று புதன்கிழமை உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை ஜந்தர் மந்தரிலிருந்து ராஜ்காட்டிற்கு மாற்றிக்கொண்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை அன்று, ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை, காவல்துறையினர் தாக்குதல் நடத்தி முறியடித்ததை கண்டித்து இன்று புதன்கிழமை அன்னா ஹசாரே ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
அப்பகுதியில் தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. அமைதியை காக்க தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், முழு நாள் உண்ணாவிரத போராட்டத்தை அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
லோக்பால் வரைவுக் குழுவில் மக்கள் சார்பாக பிரதிநிதியாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் மற்றும் சமூக சேவகி கிரண் பேடி ஆகியோர், உண்ணாவிரத போராட்டத்தை அனுமதிக்காதது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த, அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமையை பறிக்கும் செயலாகும் என்று மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிப்பதுதான் தங்கள் நோக்கமே அல்லாது காவல்துறையினருடன் சண்டையிடுவது அல்ல என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், லோக்பால் வரைவு மசோதா குறித்த பேச்சை அன்னா ஹசாரே தலைமையிலான குழு ஒரு நாள் மட்டும் புறக்கணித்தது. பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை காவல்துறையினர் தாக்குதல் நடத்தி முறியடித்ததை கண்டித்து இதைச் செய்தது. ஆனால், அதை மத்திய அரசு வேறுவிதமாக கருதி, லோக்பால் கமிட்டி கூட்டத்திற்கு அன்னா ஹசாரே குழுவினர் வந்தாலும், வராவிட்டாலும், கமிட்டி தன் கடமையை நிறைவேற்றும் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் முலம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், லோக்பால் வரைவு மசோதா குறித்த பேச்சை அன்னா ஹசாரே தலைமையிலான குழு ஒரு நாள் மட்டும் புறக்கணித்தது. பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை காவல்துறையினர் தாக்குதல் நடத்தி முறியடித்ததை கண்டித்து இதைச் செய்தது. ஆனால், அதை மத்திய அரசு வேறுவிதமாக கருதி, லோக்பால் கமிட்டி கூட்டத்திற்கு அன்னா ஹசாரே குழுவினர் வந்தாலும், வராவிட்டாலும், கமிட்டி தன் கடமையை நிறைவேற்றும் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் முலம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கபில் சிபல் கருத்தை லோக்பால் குழு உறுப்பினர் கெஜ்ரிவால் வன்மையாக கண்டித்துள்ளார். லோக்பால் கமிட்டி கூட்டத்தில் இருந்து, ஒரு நாள் வெளிநடப்பு செய்தோம். அடுத்தடுத்து நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்போம் என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கடிதம் மூலம், ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இவ்வாறு இருக்க, கபில் சிபலின் கருத்துகள், தேவையற்ற பிரச்சனைகளை கிளப்பும் முயற்சி என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில லோக் ஆயுக்தா தலைமை பொறுப்பில் இருக்கும் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறுகையில், டெல்லியில் ஜூன் 15,16 திகதிகளில் நடக்கவிருக்கும் லோக்பால் வரைவு மசோதா குழு கூட்டத்தில் தாம் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹசாரே குழுவினர் மகாராஷ்டிரா சதனில் கூடி, ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்காத டெல்லி காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி, உண்ணாவிரதத்தை ராஜ்காட்டிற்கு மாற்றுவதாக முடிவெடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment