Thursday, June 23, 2011

அல்காயிதாவைவிட இந்தியா ஆபத்தான நாடு - பாகிஸ்தான் மக்கள்

தாலிபான் மற்றும் அல் காய்தாவைவிட இந்தியாவே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள் கருதுவதாக ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்தியா, அல் காய்தா, தாலிபான் ஆகியவற்றில் பெரும் அச்சுறுத்தல் எது? எனக் கேட்டதற்கு 57% பேர் இந்தியாதான் என பதிலளித்துள்ளனர்.

10 இல் 7 பேர் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது முக்கியம் என்று  கருதுகின்றனர். இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிப்பது நல்லதாக இருக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.இரு நாடுகளிடையே பதற்றத்தைக் குறைக்க மேலும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பின்லேடனை பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் விரும்புவில்லை எனினும் அவரது மரணம் மோசமானது என பாகிஸ்தானியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவரது மரணம் நல்ல விடயம் என 14% மக்கள் மட்டுமே  குறிப்பிட்டுள்ளனர்.

பின்லேடன் மறைவிடத்தை அமெரிக்கா தாக்கியதை பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் நம்புகிறார்கள். இந்த தாக்குதலினால் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு மேலும் விரிசல் அடையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சுமார் 27 விழுக்காட்டினர் ஆதரிப்பதாக அந்த ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza