புது டெல்லி:மே மாதம் 26,27 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறைக்கான செயலாளர் ஜனித் நபோளிடனாவ் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்திக்கிறார். அமெரிக்க–இந்திய பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அவர் இந்தியா வருவதாக கூறப்படுகிறது.
மே 27-ம் தேதி நடைபெறவிருக்கும் இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா- இந்தியாவிற்கு இடையேயான பாதுகாப்பு தொடர்பான சிக்கலனா சில விஷயங்கள் தொடர்பாக இந்த பேச்சு வார்த்தை இருக்கும் என அமெரிக்க தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. நபோளிடனோ மும்பையையும் பார்வையிடுவார் என கூறப் பட்டுள்ளது .
தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் மேலும் சட்டதிட்டங்களை நடைமுறைப் படுத்துவதிலும் இரு நாடுகளுக்கு இடையேயும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் பற்றி இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும்.

0 கருத்துரைகள்:
Post a Comment