புதுடெல்லி:அமெரிக்க நிறுவனமான ’பாத்(path)’ இந்தியாவில் பெண்களிடம் நடத்திய கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசி சோதனையில் கடுமையாக ஒழுக்க சட்டங்களை மீறியதாக மத்திய அரசு நியமித்த வல்லுநர்களின் குழு அறிக்கை கூறுகிறது.
பரிசோதனைக்கு உட்படுத்திய பெண்களிடம் அனுமதி பெறவில்லை. பின்விளைவுகளை குறித்து தெரிவிக்கவில்லை. சோதனைக்குப் பிறகு அவர்களை கண்காணிப்பதிலும் கவனம் செலுத்தவில்லை என வல்லுநர் குழு அளித்துள்ள இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால், தெளிவான ஆதாரங்கள் கிடைத்த பிறகு இவ்வறிக்கை எவர்மீதும் குற்றம் சுமத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ’பாத்’ நடத்திய பரிசோதனை உரிமம்(லைசன்ஸ்) கிடைத்தபிறகு நடத்திய ஆய்வு இல்லை எனவும்,மருந்தினை மனிதர்களுக்கு நேரடியாக செலுத்தி பரிசோதிக்கும் க்ளீனிக்கல் ட்ரையல்(சோதனை) எனவும் வல்லுநர் குழுவிற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட துணைக்குழு கூறுகிறது.
சஞ்சய்காந்தி போஸ்ட் க்ராஜூவேட் இன்ஸ்ட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸின் முன்னாள் இயக்குநர் எஸ்.எஸ்.அகர்வால், ஹெல்த் சர்வீஸ் முன்னாள் இயக்குநர் எஸ்.வி.அகர்வால், ஆல் இந்தியா இன்ஸ்ட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்(AIMS) மகளிர் மருத்துவப்பிரிவின் சுனிதா மிட்டல், AIMSஇன் டீன் ராணிகுமார், குழந்தை மருத்துவ வல்லுநர் எ.கெ.தத்தா, AIMSஇன் ஃபார்மாகோலஜி பிரிவு தலைவர் ஒய்.கெ.குப்தா ஆகியோர் அடங்கிய குழு இவ்விசாரணையை மேற்கொண்டது.
மனிதர்களுக்கு மருந்தினை செலுத்தி பரிசோதனை நடத்தும்பொழுது கடைப்பிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை.லைஸன்ஸ் கிடைத்த பிறகு நடத்தும் ஆய்வை ‘பாத்’ நடத்தவில்லை. மாறாக மருந்தை நேரடியாக மனிதர்களிடம் செலுத்தி நடத்தும் க்ளீனிக்கல் சோதனையை(ட்ரையல்) ‘பாத்’ நடத்தியுள்ளது.எத்தகைய மருத்துவ பரிசோதனையை நடத்தினாலும் கடைப்பிடிக்கவேண்டிய நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன என வல்லுநர்குழு கண்டறிந்துள்ளது.
அமெரிக்க நிறுவனம் தடுப்பூசி பரிசோதனைக்கு ஆதிவாசி பெண்களை பயன்படுத்தியுள்ளது கவலையளிக்கிறது என வல்லுநர் குழு உறுப்பினரான டாக்டர்.ஒய்.கே.குப்தா கூறுகிறார். ஆதிவாசிகளுக்கு தனிப்பட்டரீதியில் பயன் தரக்கூடியது அல்லாத எவ்வித சோதனையும் அவர்களிடம் நடத்தக்கூடாது என்ற சட்டம் மீறப்பட்டுள்ளது என குப்தா மேலும் கூறுகிறார்.
பரிசோதனைக்கு உட்படுத்திய பெண்களின் அனுமதியை பதிவுச்செய்ததில் காணப்படும் முரண்பாடு அவர்களை ரகசியமாக பரிசோதனைக்கு தூண்டியதற்கான என வல்லுநர்குழுவின் இன்னொரு உறுப்பினரான டாக்டர்.ராணிகுமார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment