Wednesday, May 11, 2011

ஒசாமாவை உருவாக்கியாது யார்? அமெரிக்காவை கேள்வி கேட்கிறார் பாகிஸ்தான் பிரதமர் கிலானி

kilani
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைப்பெற்ற தேசிய கூட்டத்தில் பேசிய பாகிஸ்தானின் பிரதமர் யூசுப் ரஜா கிலானி, அமெரிக்காவினால் வெளிபடுத்தப்படுத்தப்படும் செயல்களை பார்க்கும் போது அல் கொய்தாவின் தலைவர் உசாமா பின் லாடினை தங்கள் நாட்டின் இதயத்தில் இருந்து தூக்கி எரிந்து விட்டதாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அந்த அல் கொய்தாவின் தலைவரை உருவாக்கியதற்கு காரணம் யார்? என்பதை மறந்து விட்டனர்.

தவறான கொள்கைகளை நாம் பின்பற்றிக் கொண்டு மற்றவர்கள் துரோகம் செய்ததாக பழி சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது. நாங்கள் உஸாமா பின் லாடினை பாகிஸ்தானிர்கோ அல்லது ஆப்கானிஸ்தானிர்கோ வருமாறு வரவேர்ப்பு விடுக்கவில்லை. அமெரிக்காவின் ஒரு வார கால பலத்த திட்டத்திற்கு பின்னர் அபோடாபாத்தில் இருந்த ஒசாமாவை அவரின் பலத்த பாதுகாப்பான வீட்டில் வைத்த கொல்ல முடிந்தது.

இறுதியாக அவர் தெரிவித்தது. அமெரிக்காவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு முன்பு சர்வேதேச புலானாய்வு அமைப்புகளாலேயே பின் லடினை கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் மற்ற கண்காணிப்பு துறைகளை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. எந்த கண்காணிப்பு துறைகளுக்கும் இடையில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை, அனைவரும் ஒரே நிலையில் தான் செயல்படுகிறார்கள் என்று சர்வேதேச புலனாய்வு துறையை பற்றி குறை கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza