Friday, May 13, 2011

சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை :தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டனி கட்சிகள் முன்னிலை

election 2011
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை முன்னணி நி‌லவரம் தான் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் அ.‌தி.முக. 140 இடங்களில் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வருகின்றது.

தி.மு.க. 50 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது என்று அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கிறது. எனவே தேர்தல் முடிவு அ.தி.முக.வுக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங். மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இடதுசாரி கட்சியினர் 48 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

புதுச்சேரி யூனியனில் இன்று காலை ஓட்டு எண்ணும் பணி துவங்கியது முதல் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களில், அ.தி,மு.க. 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

கேரளாவில் காங்கிரஸ் 71 இடங்களிலும், ஆளும் இடதூரி கூட்டணியினர் 65 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

அசாமில் காங்கிரஸ் கூட்டணி 25 இடங்களிலும், அசாம் கனபரிஷத் 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ. 3 வது இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. மாலை 5 மணிக்குள் முழு முடிவுகள் நிலவரம் தெரி்ந்து விடும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza