இறமையுள்ள பாகிஸ்தான் தனது தேசத்தில் நடந்த படுகொலையை பாராட்டியுள்ளது எத்தனை எஜமான் விசுவாசம் அரபு முஸ்லிம் நாடுகளிலும் வீசும் மக்கள் எழுச்சி விரைவில் பாகிஸ்தானையும் தாக்கும் என்பதாக நிகழ்வுகள் சொல்லிகின்றது விரிவாக முஸ்லிம் உம்மா அரபு முஸ்லிம் உலகம் முழுவதும் எழுச்சி கண்டு வருகின்றது மேற்குலகின் விசுவாசிகளுக்கு அந்த எழுச்சி ஒன்றன் பின்னர் ஒன்றாக முடிவு கட்டுகின்றது அந்த மக்கள் எழுச்சி அலை பாகிஸ்தானிலும் ஏற்படலாம் என்று சமூக, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதினை கொன்றுவிட்டதாக மமதையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார் அவர் உரையாற்றியவற்றில் சில முக்கிய விடையங்கள் – `உஸாமாவை சுட்டுக் கொன்றதில் நீதி நிலை நாட்டப்பட்டது. அமெரிக்க மக்கள் நினைப்பதை நிறைவேற்றுபவர்கள் என்பதை, இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா அதிக விலை கொடுத்துள்ளது. இதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்வர்.
நம் பாதுகாப்பு, அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைக் கண்டு நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்; நம் மக்கள் கொல்லப்படும் போது சும்மா இருக்க மாட்டோம். நாம் என்ன நினைக்கிறோமோ, அதைச் செய்து காட்டுவோம் என்பதை, இப்போது மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளோம். அதுதான் நம் வரலாறு” என்று தெரிவித்துள்ளார்

0 கருத்துரைகள்:
Post a Comment