நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் மே-11 முதல் 16 ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன. விடைத்தாள் நகலுக்கான விண்ணப்பங்களும் அதே நாட்களில் விநியோகிக்கப்படும்.
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், புதுச்சேரி இணை இயக்குநர் (கல்வி) அலுவலகம்,மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள்,சென்னை தவிர பிற அரசுத் தேர்வு மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம் ஆகிய இடங்களில் இதற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள்களை மீண்டும் பார்க்க விடைத்தாள் நகல்களைப் பெறுவதற்கு மொழிப் பாடம், ஆங்கிலத்துக்கு தலா ரூ.550, இதரப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275 கட்டணம் வசூலிக்கப்படும்
விடைத்தாள்களை மீண்டும் பார்க்க விடைத்தாள் நகல்களைப் பெறுவதற்கு மொழிப் பாடம், ஆங்கிலத்துக்கு தலா ரூ.550, இதரப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275 கட்டணம் வசூலிக்கப்படும்
மறுகூட்டலுக்கான கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.305, இதரப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment