Tuesday, April 26, 2011

லிபியா:கத்தாஃபியின் தலைமையகம் நேட்டோ தாக்குதலில் தகர்ந்தது

headquerters
திரிபோலி:அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் தலைமையகத்தின் மீது நேட்டோ ராணுவம் நடத்திய பலத்த தாக்குதல் நடத்தியது. இரண்டு தடவை நடந்த ஏவுகணை தாக்குதலில் பாப் அல் அஸீஸாவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கத்தாஃபியின் ராஜினாமாவைக் கோரி போராட்டம் நடத்திவரும் எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு அவர்கள் மீது கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுவரும் கத்தாஃபியின் படையினரை கீழ்படிய செய்வதற்கான தீவிர முயற்சியில் நேட்டோ ஈடுபட்டுள்ளது.

ஆப்பிரிக்க யூனியனின் மத்தியஸ்தகுழுவினருடன் கத்தாஃபி பேச்சுவார்த்தை நடத்திய கட்டிடம்தான் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கருதுவதாக பி.பி.சி தெரிவிக்கிறது.மிஸ்ரத்தாவில் ராணுவத்தை எதிர்ப்பாளர்கள் சுற்றிவளைத்துள்ளதாக டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. இங்கு பொருட்களை கொண்டு செல்ல நேட்டோ தடைச்செய்துள்ளது.

தாமதமில்லாமல் மிஸ்ரத்தாவின் கட்டுப்பாட்டை கையகப்படுத்துவோம் என எதிர்ப்பாளர்கள் நம்புகின்றார்கள். மிஸ்ரத்தாவில் மட்டுமே ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.குவைத் எதிர்ப்பாளர்களுக்கு 18 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை அளித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza