Friday, February 25, 2011

டேவிஸை விடுதலைச்செ​ய்ய மீண்டும் நிர்பந்தம்

வாஷிங்டன்,பிப்.25:இரண்டு பாகிஸ்தானியர்களை அநியாயமாக சுட்டுக்கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸை விடுதலைச் செய்ய மீண்டும் அமெரிக்கா பாகிஸ்தானிற்கு நிர்பந்தம் அளித்துள்ளது.

டேவிஸ் தூதரக அதிகாரியின் அந்தஸ்தை பெற்றவர் எனவும், சர்வதேச சட்டத்தின்படி வியன்னா ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை பாகிஸ்தான் கடைப்பிடிக்க வேண்டுமெனக்கோரி வெள்ளைமாளிகையின் பத்திரிகைத் தொடர்பு செயலாளர் ஜெய் கார்னி வலியுறுத்தியுள்ளார்.

தூதரக உறவை பேணும் நாடுகளுக்கு இந்த ஒப்பந்தத்தை பேணும் கடமை உண்டு என கார்னி கூறுகிறார். அதேவேளையில், டேவிஸ் வழக்குத் தொடர்பான தீர்மானத்தை பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்மானிக்கும் என பாகிஸ்தான் தலைவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza