Friday, January 7, 2011

புதுவலசை ஜமாஅத்தின் (MDPS) - 2011-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள்

புதுவலசை ஜமாஅத்தின் (MDPS) -  2011-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள்


நமதூரில் 2011-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதர்கான ஜமாஅத் பொதுகூட்டம் இன்று 7-01-2011  அஸர் தொழுகைக்கு பிறகு சரியாக 5 மணி அளவில் நடைபெற்றது. இதில் நமது ஊரின் பழைய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சங்கத்தார்கள், பொதுமக்கள் திரலாக கூடியிருந்தனர். புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதர்கான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது இதற்கு அமீராக ஜனாப் அப்துல் ரஜாக் தலைமை வகித்தார் மேழும் இந்த குழுவில் ஜமாஅத் மற்றும் சங்கத்து உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.  இந்த குழு கூடி ஆலோசித்து சற்று நேரத்தில் நமது ஊரின் புதிய நிர்வாகிகளின் பட்டியளை வெளியிட்டனர்.  நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு.

நிர்வாகிகள் :

தலைவர் : ஜனாப். அஹமது கபீர்
துணைதலைவர் : ஜனாப். ஜவஹர் அலி
செயலாளர் : ஜனாப். ஜகுபர்
துணை செயலாளர் : ஜனாப். அரபி முஹம்மது
பொறுலாளர் : ஜனாப். அப்துல் ரஜாக்

உறுப்பினர்கள் :

1. ஜனாப். பஜல் ரஹ்மான்
2. ஜனாப். முஹம்மது ஷரிப்
3. ஜனாப். நூர் முஹம்மது
4. ஜனாப். ஜலாலுதீன்
5. ஜனாப். தஹ்னியத் அலி
6. ஜனாப். பௌசுல் கான்
7. ஜனாப். A.K.தௌபீக்
8. ஜனாப். ரஹ்மதுல்லாஹ்
9. ஜனாப். ஜியாவுர் ரஹ்மான்
10. ஜனாப். சலாஹுதீன்
11. MMS தலைவர்
12.MMS செயலாளர்
13.MMS பொருலாளர்

அல்லாஹ்வின் கிருபையினால் புதிய நிர்வாகிகள் அனைவரும் நமது ஊர் மக்களின் ஒருமித்த கருத்தோடும், ஒத்துழைப்போடும் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு ஜமாஅத்தின் புதிய தலைவர் சிறிது நேரம் உரையாற்றினார் அவர் தனது உரையில் குறிப்பிடும் போது ஜமாஅத்தை புறக்கணித்து தனியாக தொழுகை நடத்தும் TNTJ-வினருக்கு நமது ஜமாஅத்தில் எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்தார். இதனை கேட்ட TNTJ-வை சேர்ந்த சகோதரர். அப்துல் ஹலீம் நாங்களும் இந்த ஊரை சேர்ந்தவர்கள் தான் எங்களுக்கும் ஜமாஅத்தில் அனைத்து உரிமைகளும் உண்டு என்று இடைமறிக்க கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து புதிய துணைதலைவர். சகோதரர் ஜவஹர் அலி எழுந்து நாங்கள் உங்களை பிரிக்கவில்லை உங்களை நீங்களாக பிரித்து கொண்டீர்கள் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில் புதுவலசை.இன்-னில் வந்த செய்தி சம்பந்தமாக மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் செயலாளர் நன்றி கூறி கூட்டம் இனிதே நிறைவுற்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza