புதுடில்லி: நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் இந்துத்துவா இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அபினவ் பாரத் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும் என, தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை நேற்று சந்தித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் தாரிக் அன்வர், இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசினார்: மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, அமைச்சரிடம் தெரிவித்தேன். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, இந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் அனைவரையும் விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், 1994ம் ஆண்டு முதல் நடந்த அனைத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு உண்மையான விசாரணை நடத்த முன்வர வேண்டும் எனவும் கேட்டுள்ளேன். மேலும் நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அபினவ் பாரத் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் தாரிக் அன்வர் கூறியுள்ளர்செய்தி :பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment