Wednesday, January 12, 2011

சம்ஜோதா:தலைமறைவான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைப் பற்றி துப்புக்கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு - என்.ஐ.ஏ அறிவிப்பு

புதுடெல்லி,ஜன.11:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜன்சி அறிவித்துள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளான சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா, அஸ்வினி சவுஹான் என்ற அசோக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களில் சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா ஆகியோரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் பரிசும், அஸ்வினி சவுஹான் என்ற அசோக் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசும் இவ்வழக்கை விசாரித்துவரும் என்.ஐ.ஏ-வால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் கைதான ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலாகும் இது.

சம்ஜோதா உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்தான் தலைமறைவாகியுள்ளனர் என அஸிமானந்தா நீதிமன்றத்தில் அளித்த தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டுவரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் புதுடெல்லியிலுள்ள என்.ஐ.ஏ அலுவலக எண்ணை(1-29947020, 011-29947021) தொடர்பு கொள்ளவும்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza