லண்டன்,ஜன.1:அரபு நாடுகளுடன் போர் ஏற்பட்டால் இஸ்ரேல் அணுகுண்டு வீச தயாராக இருந்ததாக பிரிட்டன் தூதரக ஆவணம் தெரிவிக்கிறது.
1980 ஆம் ஆண்டு இஸ்ரேலில் பிரிட்டன் தூதராக பணியாற்றிய ஜோன் ராபின்சன் பிரிட்டன் வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய ஆவணத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் அணு ஆயுதத் தாக்குதலைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென ரோபின்சன் சுட்டிக்காட்டுகிறார்.
1980 ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி அனுப்பிய ஆவணத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை 30 ஆண்டுகள் கழித்து வெளியிடலாம் என்ற சட்டத்தின்படி கடந்த மாதம் 29-ஆம் தேதி இந்த ஆவணம் வெளியிடப்பட்டது.
மேற்காசியாவில் அமெரிக்கா மேற்கொண்ட அமைதி முயற்சி தோல்வியடைந்த சூழலில் இஸ்ரேலின் சூழ்ச்சி வெளியாகியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
மேற்காசியாவில் ஒரே அணு ஆயுதநாடாக இஸ்ரேல் உள்ளது. எங்களிடம் 200 அணுகுண்டுகள் இருப்பதாக 1986 இல் அணுசக்தி வல்லுநரான மொர்தேவாய் வனுனு தெரிவித்திருந்தார். நெஜீவில் திமோனா அணுசக்தி நிலையத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றியவர் வனுனு.
தென்னாப்பிரிக்காவிற்கு அணு ஆயுதத்தை விற்க இஸ்ரேல் கடந்த 1975 ஆம் ஆண்டு வாக்குறுதியளித்திருந்தது என்பதை பிரிட்டீஷ் தின இதழான கார்டியன் கடந்த மேமாதம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி:பாலவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment