அயோத்தியா,டிச.4:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தாங்கள் கண்டறிந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான பரிகார வழியை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக பாப்ரி மஸ்ஜித் வழக்கில் மனுதாரர்களான ஹாஷிம் அன்ஸாரியும், மஹந்த் ஞான தாஸும் அறிவித்துள்ளனர்.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எல்லா மனுதாரர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்தால் தாங்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கான பரிகார வழியை நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என இருவரும் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
டிசம்பர் 10 ஆம் தேதி பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறையை பகிரங்கப்படுத்தப் போவதாக அன்ஸாரி நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.
அகில பாரதீய அகாதா பரிஷத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட மஹந்த் ஞான் தாஸ், அமைப்பில் பிளவை ஏற்படுத்தியதற்காக வி.ஹெச்.பியையும், அதன் தலைவர் அசோக் சிங்காலையும் குற்றஞ்சாட்டினார்.
வி.ஹெச்.பி கொள்ளைக்காரர்களின் கூடாரம் என வர்ணித்த ஞான் தாஸ் வி.ஹெச்.பியின் நோக்கம் ராமர் கோயிலைக் கட்டுவதைவிட அரசியலிலும், கலவரத்தை தூண்டுவதிலும்தான் அவர்களின் விருப்பம் அடங்கியுள்ளது என்றார்.
பிரச்சனையைக்குரிய தீர்வைக் குறித்து நாங்கள் ஆலோசித்து வரும்பொழுது அவர்கள் அகாதா பரிஷத்தில் பிளவை ஏற்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். தான் இப்பொழுதும் அகாதா பரிஷத்தின் தலைவர் என்றும், ஜனவரி மாதத்திற்கு முன்பு அப்பதவியை ராஜினாமாச் செய்யப் போவதாகவும் தாஸ் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துரைகள்:
Post a Comment