டெல் அவிவ் : இஸ்ரேலின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எட்டு மணி நேரத்துக்கு மேலாக பரவும் காட்டு தீயினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எரிந்து கிராமங்களில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிராமங்களில் உள்ளவர்களை வெளியேற்ற வந்த தீயணைப்பு காவலர்கள் 40 நபர்கள் தீயில் கருகி இறந்தனர்.
காட்டு தீ குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இது போன்ற ஒரு தீ இஸ்ரேலின் வரலாற்றில் வந்ததில்லை என்று கூறினார். இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைபாவின் கார்மல் மலையில் ஆரம்பித்த இத்தீயை கட்டுபடுத்த உதவி கோரி ரஷ்யா, சைப்ரஸ், க்ரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சைப்ரஸ் மற்றும் க்ரீஸ் தீயை கட்டுபடுத்த ஹெலிகாப்டர்களை அனுப்ப இசைந்துள்ளன. இஸ்ரேலின் அனைத்து பகுதிகளில் இருந்து வந்துள்ள தீயணைப்பு படையினர் போராடியும் இது வரை அணைக்கப்பட முடியாமல் தீ கொழுந்து விட்டு எரிகிறது. தீயை அணைக்க வந்த தீயணைப்பு காவலர்களில் 50 நபர்கள் வந்த பேருந்து ஒன்று தீப்பிழம்பில் விழுந்து அதிலிருந்த 40 நபர்கள் கருகி இறந்தனர்.
எப்போது தீ கட்டுபாடுக்குள் கொண்டு வரப்படும் என்பது குறித்து உடன் சொல்ல முடியாது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார். தீ ஹைபாவிலிருந்து டெல் அவிவ் செல்லும் பாதைக்கு செல்லும் முன் அப்பாதையே தீயை தடுக்கும் தடுப்பாக மாறும் என்றும் அது முடியாவிட்டால் கடல் நீர் அதை அணைத்து விடும் என்றும் தீயணைப்பு வீரர்கள் கருத்து தெரிவித்தனர்
0 கருத்துரைகள்:
Post a Comment