கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்து டிவிசன் உறுப்பினராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் சிறையிலிருந்தே வெற்றிப் பெற்ற பேராசிரியர் அனஸ் போலீஸ் காவலுடன் பதவிப் பிரமாணம் செய்தார். நபிகளாரை அவமதித்த முவாற்றுப்புழா பேராசிரியர் ஜோசப் கைவெட்டு சம்பவத்தில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதுச் செய்யப்பட்ட பேராசிரிய அனஸ் வியூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க மக்கள் ஆதரவை பெறுவதற்காக சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ப்ளாக் பஞ்சாயத்து டிவிசனில் போட்டியிட்டார். சிறைக்குள்ளிருந்தே போட்டியிட்டு பிரச்சாரம் செய்யவோ, வாக்களிக்கவோ செய்யாமலேயே பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார் அவர்.
இங்கு இடதுசாரி கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேராசிரியர் அனஸ் பதவிப் பிரமாணம் செய்ய கேரள நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து அனஸ் போலீஸ் காவலுடன் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்திற்கு வருகைப் புரிந்து பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் அதிகாரிகளின் அனுமதியோடு உரையாற்றினார் அவர். அதில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்கில் கைதுச் செய்து சிறையிலடைக்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்ப்புதான் தனது வெற்றி என அனஸ் தெரிவித்தார்.
அனஸ் வருகையொட்டி நூற்றுக்கணக்கான மக்கள் அவரைக் காண்பதற்காக வருகைப் புரிந்தனர். மேலும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் அனஸிற்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment