பாரிஸ்,நவ2:பிரான்சில் மிகவும் வெறுக்கப்பட்ட அதிபர்களில் ஒருவராக சர்கோஸி திகழ்வதாக பிரான்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 50 ஆண்டுகளில் இவ்வளவுதூரம் வெறுப்பை சம்பாதித்த அதிபர் இல்லை. வெறுப்பின் உச்சகட்டத்திலிருக்கும் யாரேனும் தன்னை தாக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் தற்போது சர்கோஸி உள்ளார்.
இந்த பயத்தை தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார் சர்கோஸி. ஆனால், வெறுப்பிற்கு என்ன காரணம் என்பது மட்டும் சர்கோஸிக்கு புரிந்துக்கொள்ள முடியவில்லை.
கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் மூன்றில் ஒரு பகுதி மக்கள்தான் சர்கோஸியை ஆதரிக்கின்றார்கள். 1968 ஆம் ஆண்டில் ஜெனரல் சார்ல்ஸ் குல்லா சந்தித்த அதே நிலையை இன்று சர்கோஸி சந்திப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.
சர்கோஸிக்கு மாடல் அழகி கார்லா புரூணினுடனான விருப்பமினை வெறுப்பை சம்பாதித்துள்ளதாக ஒரு பிரிவினர் கூறுகின்றனர். ஆனால், பென்சன் வயதை உயர்த்தியது உள்ளிட்ட சர்கோஸி மேற்கொண்ட சில உபயோகமற்ற சீர்திருத்த நடவடிக்கைகள் அவர்மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளதாக வேறு சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
செய்தி:பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment