Tuesday, November 16, 2010

வாடிகனின் அக்டோபர் மாநாட்டிற்கு கண்டனம்

நவ.15:மத்திய கிழக்கு அரசியலில் இஸ்லாத்தின் அடையாளத்தை இல்லாமல் செய்தல் எனும் கருப்பொருளில் வாடிக்கனில் நடைபெற்ற மாநாட்டை இஸ்லாமிய அறிஞர்கள் கண்டித்துள்ளனர். இதுபோன்ற மாநாடுகள் இதற்கு முன்னரும் பலமுறை இடம்பெற்றுள்ளன.

கிழக்கத்திய நாடுகளின் கத்தோலிக்க மதகுருக்கள் பலர் இம் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். 1978ல் நடைபெற்ற மாநாடும் 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடும் இஸ்லாத்தையும் அதன் எல்லை விரிவாக்கத்தையும் தடுக்கும் நோக்கம் கொண்டிருந்தது. தற்போதைய மாநாடும் மத்திய கிழக்கில் மதச்சார்பின்மையை வலியுறுத்தி நடைபெற்றுள்ளது.

உலகில் நடைபெறும் பெரும் இரத்தக் களரிகள், யுத்தங்களை நிறுத்துவதிலும் அநீதிகளை ஒழித்துக் கட்டுவதிலும் கத்தோலிக்கத் திருச்சபைகள் எவ்வித கரிசணையும் காட்டாத நிலையில் இஸ்லாத்தை நேரடியாக எதிர்க்கும் இதுபோன்ற மாநாடுகள் நவீன சிலுவை யுத்தத்தின் அடையாளமாகவே கொள்ளப்பட வேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போப்பாண்டவர் 16ஆவது பெனடிக்ட் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் தொடர்பாக விசேச கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளது மத்திய கிழக்கில் மேற்கின் தலையீட்டை மேலும் கூர்மைப்படுத்துவதற்கான ஒரு முஸ்தீபு என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக்கிலும் லெபனானிலும் வாழும் சிறுபான்மை கிறிஸ்தவ மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் மிகுந்த சந்தேகத்திற்குரியவை. முன்பை விட ஈராக்கில் கிறிஸ்தவ பிரச்சாரம் தீவிரமடைந்து வருவதோடு பாரியளவிலான புதிய கத்தோலிக்கத் திருச்சபைகளும் நிறுவப்பட்டு வருகின்றன.

பல்லாயிரக்கணக்கான குர்திஷ் முஸ்லிம்களை கிறிஸ்தவ மதமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு வாடிகன் உதவி வருகிறது. இதேவேளை, பலஸ்தீனத்தில் சிறுபான்மையாக வாழும் கிறிஸ்தவர்கள் உரிமை பற்றிப் பேசவும் வாடிகன் முயல்கின்றது. எதிர்வரும் 50 ஆண்டுகளுக்குள் ஆபிரிக்காவை கிறிஸ்தவமயமாக்கும் திட்டமொன்றையும் ஏற்கெனவே வாடிகன் அமுல்படுத்தி வருகின்றது.

போப்பாண்டவர் 16 ஆவது பெனடிக்ட் தேர்வு செய்யப்பட்டது முதல் அவர் வெளியிட்டு வரும் கருத்துகள் இஸ்லாமிய உலகம் முழுவதும் பெரும் ஆவேசத்தையும் பரப்பையும் ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இத்தாலியின் பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றிய போப் இஸ்லாத்தின் தூதர் இந்த உலகிற்கு எவ்வித நன்மையையும் கொண்டுவரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மதங்களுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் நல்லுறவையும் வளர்க்கும் காலகட்டத்தில் போப்பாண்டவர் தலைமையிலான வாடிகன் புதியதோர் சிலுவை யுத்தத்திற்கு தயாராகி வருவது குறித்து இஸ்லாமிய உலகம் விழித்துக்கொள்ள வேண்டும் என்ற கலாநிதி முஹம்மத் அமமாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அந்நாட்டில் கிறிஸ்தவப் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகின்றது. குறிப்பாக, வடக்கிலுள்ள குர்திஷ்தானில் 2003ம் ஆண்டுக்குப் பின்னர் நூற்றுக்காணக்கான தேவாலயங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

லெபனானில் 1921ம் ஆண்டு பிரான்ஸ் அறிமுகம் செய்த அரசியலமைப்பின்படி மொனரைட் கிறிஸ்தவர்களுக்கு நாட்டின் ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டு வருகின்றது. லெபனானின் அரசியல் ஸ்திரப்பாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza