வாஷிங்டன்,நா.1:இணையதள உலகின் மாபெரும் திருடனாக கருதப்படும் ஹேக்கர் ஓய்வு பெறுகிறார். பெரும் நிறுவனங்களின் மிகவும் ரகசியமான பாஸ்வேர்டுகளை திருடி பணக்கொள்ளை நடத்தும் கம்யூட்டர்கொள்ளைக்காரனான ஹேக்கர்களில் ஒருவர்தான்
ஓய்வு பெறும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஸ்யூஸ் என்ற ஆபத்தான மென்பொருளை பயன்படுத்தித்தான் இவர் இணையதளத்தில் ரகசிய கோடுகளை தகர்த்திருந்தார்.
வங்கிகளிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து அதன்மூலம் வாகனங்களும், கட்டிடங்களும் வாங்கிக் குவித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த இந்த தீவிரவாதி இப்பொழுதுகூட மர்மமாகத்தான் உள்ளார்.
ஆனாலும் இவருடைய மென்பொருளான ஸ்யூஸ் பிரசித்திப் பெற்றதாகும். இனிமேல் தான் இந்தத் தொழிலை நிறுத்தப்போவதாக ரஷ்யாவைச் சார்ந்த ஹேக்கர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க நகரங்களிலிருந்து பல்வேறு நிறுவனங்களின் நபர்களிடமிருந்து 100 மில்லியன் டாலர் திருடியதைத் தொடர்ந்துதான் இவர் பிரசித்திப் பெற்றார்.
பெரும் நிறுவனங்களின் மென்பொருளில் ஸ்யூஸ் என்ற இணையதள பேரழிவாளனை கடத்தி அந்த மென்பொருளை சீர்குலைத்து ரகசிய
கடவுச் சொற்களை(பாஸ்வேர்ட்ஸ்) கைவசப்படுத்தித்தான் இந்த மோசடிகள் நடந்துள்ளதாக கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனமான செக்யூர் வர்க்ஸ் இயக்குநர் ஜான் ஜாக்ஸன் தெரிவிக்கிறார்.
ஓய்வுபெறப் போவதாக ஹேக்கர் கூறியிருந்தாலும் அதனை நம்ப இயலாது. மீண்டும் புதிய தந்திரங்களுடன் களமிறங்குவதற்கான சூத்திரம்தான் இது. ஆதலால், மிகுந்த ஜாக்கிரதை தேவை. 2007 லும், 2008 லும் இவர் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு நடைப்பெறவில்லை என்பது பின்னர் தெளிவானது." இவ்வாறு ஜான் ஜாக்ஸன் கூறியுள்ளார்.
பொதுவாக பாதுகாப்பு குறைந்தவற்றைத்தான் இவர் தேர்ந்தெடுக்கிறார். ரகசியமான இடத்தில் அமர்ந்துக் கொண்டு கட்டுப்படுத்துவதுதான் இவருடைய வேலை.
இவர் முன்பு ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த பிறகுதான் அமெரிக்க வங்கிக் கணக்கிலிருந்து 70 மில்லியன் டாலரை திருடியுள்ளார் என எஃப்.பி.ஐ கூறுகிறது. இவருடைய கும்பலைச் சார்ந்த ஏராளமானோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். பலரும் பல மையங்களில் எஃப்.பி.ஐயின் கண்காணிப்பில் உள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment