Sunday, November 21, 2010

ஈரானுக்கெதிரான ஐ.நா தீர்மானம் - வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாத இந்தியா

ஐ.நா,நவ.20:ஈரான், மியான்மர் மற்றும் வடகொரியாவில் நடைபெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதற்காக ஐ.நா வின் மனித உரிமை அமைப்பு தயாராக்கிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்கவில்லை.

இந்த 3 நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறும் தீர்மானத்தை ஆதரித்து ‘ஆம்’ என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரித்த பொழுது, இந்தியா மியான்மருக்கு எதிராக ‘இல்லை’ என வாக்களித்துவிட்டு ஈரான் மற்றும் வடகொரியாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை.

மியான்மர் மற்றும் வடகொரியாவை ஆதரித்த சீனா ஈரானுக்கெதிராக வாக்களித்தது. அதேவேளையில், எங்களின் நாட்டை சீரழிக்க விரும்பும் இந்த தீர்மானத்திற்கு பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதாகவும் அவர்கள் காஸ்ஸாவில் கூட்டுப் படுகொலைக்கு பலியாகும் பெண்களையும், குழந்தைகளையும் பார்ப்பதில்லை எனவும் ஈரான் பிரதிநிதி முஹம்மது ஜவாத் லாரிஜானி தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் - பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza