ஹைதராபாத்,நவ.23:2007 ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டுள்ள சுவாமி அஸிமானந்தாவை விசாரிப்பதற்காக தங்களுடை கஸ்டடியில் விடுவதற்கு சி.பி.ஐ கோரிய மனு மீதான விசாரணையை நீதிமன்றம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
எதிர்தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று கூடுதல் முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் சி.பி.ஐ மனுமீதான வாதத்தை கேட்பதை புதன்கிழமை ஒத்திவைத்தார்.
கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஹரித்துவாரில் ஒளிந்திருந்த அஸிமானந்தாவை சி.பி.ஐ கைதுச் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 தினங்கள் தங்களது கஸ்டடியில் விசாரணைக்கு அனுப்பக்கோரும் மனுவை சி.பி.ஐ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
செய்தி:பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment