Tuesday, November 2, 2010

பார்சல் குண்டு:கைதுச் செய்யப்பட்ட மருத்துவ மாணவி விடுதலை

சன்ஆ,நவ2:அமெரிக்காவிற்கு செல்லவிருந்த சரக்கு விமானங்களில் பார்சல் வெடிப்பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக யெமனில் கைதுச் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவியை அதிகாரிகள் விடுவித்தனர்.

மாணவியின் பெயர் விபரங்களை யாரோ தவறாக பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்ததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கார்கோ நிறுவனத்திற்கு அளித்த தொலைபேசி எண்ணை பின்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவ கல்லூரி மாணவியான 22 வயது ஹனான் அல் ஸமாவி கைதுச் செய்யப்பட்டார். ஆனால், அவருடைய முழுமையான முகவரியும், தொலைபேசி எண்ணும் தெரிந்த யாரோ திசை திருப்புவதற்காக தவறாக பயன்படுத்தியுள்ளதாக உறுதியானது.

உண்மை வெளிச்சத்திற்கு வந்ததாக அம்மாணவியின் தந்தையான முஹம்மது அல் ஸமாவி தெரிவித்துள்ளார். மாணவி அல் ஸமாவியையும், அவருடைய தாயாரையும் ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

தற்போது அதிகாரிகளின் விசாரணை அரேபியா துணைக் கண்டத்தில் அல்காயிதா தலைவர்களில் முக்கியமானவர் எனக் கூறப்படும் சவூதி வம்சாவழியைச் சார்ந்த இப்ராஹீம் ஹஸன் அல் அஸீரியை நோக்கி திரும்பியுள்ளது.
செய்தி:பாலைவ்னதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza