வாடிகன்,நவ2: அமெரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிறுவர், சிறுமிகளிடம் செக்ஸ் சித்ரவதை செய்ததாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது புகார்கள் கூறப்பட்டன.
கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை இச்சம்பவம் நடந்ததாக தெரிகிறது. எனவே இந்த புகாரில் சிக்கிய பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் நகரில் கூடினர். பின்னர் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். செக்ஸ் புகாரில் சிக்கிய பாதிரியார்கள் மீது போப் ஆண்டவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இப்போராட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்கு நடந்தது. இதில், இங்கிலாந்து, அமெரிக்கா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி:பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment