கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. முதற்கட்ட மாக நேற்று 7 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. கேரளா உட்பட தமிழக, கர்நாடக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்டு- காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதை தடுக்க போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது ஒரு கும்பல் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது இதில் யாருக்கும் காயம் ஏற்ப்படவில்லை.
பானூர் உள்பட 7 இடங்களில் வாக்குச்சாவடி அருகே குண்டுகள் வெடித்தன. திருவனந்தபுரத்தில் காயன்குளம் நகரசபை 40-வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சாமினாவையும், அவருடைய கணவரையும் ஒரு கும்பல் வீடு புகுந்து வெட்டியது.
0 கருத்துரைகள்:
Post a Comment