Friday, June 20, 2014

இலங்கை முஸ்லிம்களின் மீது மீண்டும் இனவெறி தாக்குதல் - இலங்கை அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்!


இலங்கை களுத்துறை மாவட்டம் அளுத்காமாவில் பொதுபலசேனா என்ற சிங்கள இனவெறி அமைப்பு ஒன்று நடத்திய ஊர்வலத்தில் முஸ்லிம்களை குறிவைத்து ஏற்படுத்திய கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. இந்த கலவரத்தில் இதுவரை மூன்று முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை தடுக்காத இலங்கை அரசை கண்டித்து இன்று (19-06-2014) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 4.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வடசென்னை மாவட்ட தலைவர் கே.எஸ்.எம். இபுராஹிம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். SDPI கட்சியின் மாநில செயலாளர் T. ரத்தினம் அண்ணாச்சி அவர்கள்  மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையேற்று, இலங்கை அரசிற்கெதிராக கண்டன உரையாற்றினார். அந்த கண்டன உரையில், இந்த கலவரத்தை கட்டுப்படுத்திடவும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்திடவும் இலங்கை அரசோ காவல்துறையோ எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையர் திரு. நவநீதன் பிள்ளை அவர்களும் இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பெரும் அதிர்ச்சி தெரிவித்ததாகவும், மேலும் இந்த வன்முறை இலங்கையில் பல்வேறு இடங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இனவெறி வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிய இலங்கை அரசை கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் இலங்கைக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்ய வலியுறுத்தியும், ராஜபக்க்ஷே அரசுடனான அனைத்து உறவுகளையும் மத்திய அரசு துண்டிக்கக் கோரியும் வேண்டுகோள் விடுத்தார்.
இறுதியாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலங்கை அரசிற்கெதிரான தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza