Wednesday, March 5, 2014

இராமநாதபுரம் தடியடியை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!



இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று (04-03-2014) மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கடந்த பிப்ரவரி 17ம் தேதி துவக்க தினத்தை கொண்டாடும் விதமாக இராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்றிருந்தது.
எழுத்துப்பூர்வமான அனுமதி வழங்கிய பின்னர், பேரணி துவங்கவிருந்த நேரத்தில் மாலை 4 மணியளவில் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பேரணியை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். காவல்துறையின் இந்த சட்டவிரோதமான கொலைவெறித்தாக்குதலில் ஏராளமான முஸ்லிம்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத செயலைக் கண்டித்தும், முஸ்லிம் விரோதப்போக்கைக் கண்டித்தும் இன்று மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம் நடத்தியது.

நீதி வேண்டி தொடர் போராட்டம்: கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்!



கோவையில் 02 - 03 - 2014 அன்று மாலை 06.00 மணிக்கு இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் K. ராஜா உசேன் அவர்கள் தலைமை தாங்கினார். கோவை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

Dua For Gaza