Monday, February 17, 2014

மருத்துவ உதவி வேண்டிய சகோதரருக்கு உதவி செய்ய கோரிக்கை: EPMA செயளாலர் வேண்டுகோள்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

நமதூரைச் சேர்ந்த சகோதரர் உமர் அலி அவர்களின் மகன் ரஹ்மத்துல்லா (ஆட்டோ ஓட்டுனர்) அவர்களுக்கு இரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். அவரை சோதித்த மருத்துவர்கள் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.

அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும். அதனால் உடனடியாக Angioplasty என்னும் இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் படியும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்காண செலவு சுமார் 3 - 3.5 லட்சம் ஆகும் என தெரிகிறது. சகோதரர் ரஹ்மத்துல்லா அவர்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்துமளவிற்கு வசதி இல்லாததல் தன்னுடைய உயிருக்காக உதவியை நாடிநிற்கின்றார்.

அவருக்கு உதவும் வகையில் EPMA சார்பாக உதவிகளை செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம். அந்த அடிப்படையில் நமதூரை சார்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் அமீரகத்தில் பணி செய்துவருகின்றோம். நாம் ஒவ்வொருவரும் முன்வந்து நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முனைந்தால் நிச்சயம் அந்த சகோதரரின் வாழ்வுக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரும் உதவியை செய்திட முடியும்.


உதவிகளை நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்துவருகின்றோம். அதனை ஒருங்கிணைத்து ஒரு கூட்டமைப்பின் கீழ் நிதிகளை திரட்டி அனுப்பிவைக்கும் பட்சத்தில் நிச்சயம் அது பெரும் தொகையாகவும், குறித்த நேரத்தில் பயனளிக்க கூடியாதாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

தங்களது உதவிகளுக்கு கீழ்கண்ட நபர்களை தொடர்புகொண்டு நிதிகளை கொடுத்து உதவுங்கள்.

Dubai - ஜனாப். நஸீர் ஹுஸைன் (EPMA துணை தலைவர்) - 050-2125206
Sharjah - ஜனாப். ஜெய்னுதீன் (EPMA பொருளாளர்) - 055-7184265
Ajman - ஜனாப். செய்யது அன்வர் (EPMA துணை செயளாலர்) - 055-3992572
Abudhabi - ஜனாப். ஷஹாபுதீன் (EPMA ஒருங்கினைப்பாளர்) - 050-1319090
Al Ain, Umm Al Quin, Ras Al Kaimah - ஜனாப். பைசல் (EPMA செயளாலர்) - 052-9043024
மேலதிக தகவல்களுக்கு ஜனாப். உமர் கான் (EPMA தலைவர்) - 050-7984218

நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் (அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது. (அல்குர்ஆன் 57:18)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்." அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நூல்: புகாரீ 1410.

பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அதீ இப்னு ஹாத்திம்(ரலி), நூல்: புஹாரி (1417)

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும்..... என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புஹாரி (1419)

உங்களால் முடிந்த உதவிகளை தாராளமாக தந்து உதவுங்கள். நமது ஊர் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நம்முடைய நண்பர்கள் மற்றும் நம்முடன் வேலை செய்யும் நல் உள்ளங்களிடமும் கேட்டு அவரது உயிரை பாதுகாக்க உதவுங்கள். நாம் எடுக்கும் சிறு முயற்சி ஒரு உயிருக்கும், ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்து இன்று இந்த சகோதரர் நாளை ? அது அல்லாஹ்வின் புறத்தில் இருக்கிறது. ஆகவே அல்லாஹ்விற்கு முற்றிலும் வழிபட்ட நல்ல முஃமினாக இருப்போம்.

அந்த சகோதரரின் பூரண குணத்திற்கு அல்லாஹ்விடம் பிரார்தியுங்கள்.


இப்படிக்கு
முஹம்மது பைசல்
EPMA செயளாலர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza