நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 124-வது விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை (06.02.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டு விழா நமது ஜமாஅத் தலைவர் ஜனாப்.லியாகத் அலிகான் அவர்கள் தலைமையிலும், ஆண்டு விழா கல்விக்குழுவின் கௌரவ தலைவரும், தாசின் அறக்கட்டளை நிறுவனருமான ஜனாப். தாசின் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. விளையாட்டு விழா காலை 8 மணியளவில் தொடங்கி தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆண்டு விழா மாலை சரியாக 5 மணியளவில் தொடங்கியது.
விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கும் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த வருட பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நிரலில் ஆடல்,பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நமதூர் ஜமாத், முஸ்லிம் முன்னேற்ற சங்கம், தாசின் அறக்கட்டளை,பள்ளிகளின் தாளாளர்,ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவியர் உட்பட அனைவரும் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
புகைப்பட உதவி: puduvalasai photo's facebook page
1 கருத்துரைகள்:
my school
Post a Comment