Thursday, February 20, 2014

நீதிக்கு சாட்சி பகருங்கள் ! - பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அனைத்து மக்களுக்கும் சமஉரிமை கிடைக்கும் புதிய இந்தியாவை படைக்கும் பயணத்திலே தேசம் முழுவதும் பயணித்திக்கொண்டிருக்கின்றது. அதன் பிறப்பின் முகவுரை ஃபாசிசத்தைக் கண்டு சமுதாயம் பயந்து பின்வாங்கி வாசலைத் திறந்து கொடுத்து ஓடிய போது அவ்வழியல்ல இவ்வழி என திசைக்காட்டி - அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிமையல்ல!. நீதிக்கு சாட்சி பகருங்கள் என புரட்சியின் ஓசையாக எழுப்பபட்டது.

பிப்ரவரி 17, பாப்புலர் ஃப்ரண்ட் தினம் தேசம் முழுவதும் விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது தமிழகத்தைத் தவிர. ‘மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்’! என்ற முழக்கத்துடன் ராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முறையாக அனுமதி எழுத்துப் பூர்வமாக பெற்றிருந்தும் காவல்துறை சதி வலைகலைப் பிண்ணி கலவரத்தை தூண்டினார்கள். ஆனால், பேரணியில் கலந்து கொண்டவர்கள் நீதியின் போராளிகள் என்பது மறந்துவிட்டு திட்டத்தை தீட்டியுள்ளார்கள். எனவே சூழ்ச்சி தோல்வியில் முடிந்தது. அவர்கள் திட்டமிட்டு சதி செய்தார்கள்; அல்லாஹ் சதி செய்தான்; (3:54).


பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கடந்து வந்த பாதை முற்கள் நிறைந்த ஒத்தையடி பாதையில் தன்னுடைய ஆடை பட்டுவிடாமல் அனைத்து தடங்கல் கடந்து வேர்பிடித்து மிகப்பெரிய மரமாக வளர்ந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

2004-ல் கடலூர் நெல்லிக்குப்ப வீதியில் நடந்த சிறிய சண்டையை கூட தேசத்திற்கு எதிராக நடந்த பிரச்சனையாக திரித்து பெண்கள் உட்பட 26 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றம் விடுதலை செய்தது அல்ஹம்துலில்லாஹ்!. அதே போன்று 2006–ல் ரத்தின சபாபதி என்ற உளவுத்துறை அதிகாரி வெடிகுண்டு வைத்ததாக இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்களின் போராட்டத்திற்கு பின் CBCID விசாரணைக்கு அன்றைய அரசு உத்திரவிட்டு, விசாரணைக்கு பிறகு பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என அறிக்கை தந்தது. இவ்வாறு பல தடங்களை கடந்து சத்தியம் ஓங்க அசத்தியம் அழிந்துகொண்டே வருகின்றது. ஆக பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் நடந்த சதித் திட்டங்களை விரைவில் அம்பலப்படுத்துவோம். இன்ஷா அல்லாஹ்!

அணிவகுப்பு வீரர்களை வீழ்த்த நினைத்த போது மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டதாக கருதுகிறேன். அவர்களை லத்தியால் அடித்த போது சலனமில்லாமல் நடந்தார்கள். வழியில்லாமல் ஓசை எழுப்பும் வாத்தியங்களை உடைத்தார்கள். அப்பொழுதும் நிற்கவில்லை. அவர்களது பாதங்கள் பூமியை புரட்சிகரமான ஓசையுடன் தட்டியது. மீண்டும் அந்த வீரர்களின் உடல்களில் மீது கம்புகளால் ஓவியங்களை வரைந்தார்கள். ஓவிய அலங்காரத்துடன் அணிவகுப்பு என்பதாக தொடர்ந்தார்கள். பிறகு கண்ணீர் புகை குண்டுகளும், ரப்பர் தோட்டாக்களும், கற்களும், நெரிசல்களும் நீதியின் போராளிகள் எழுப்பிய கட்டிடத்தை தகர்க்க முற்பட்டது முடியவில்லை. அல்லாஹ் அக்பர்!

எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போராடுகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான். (61:4)

மக்கள் மீது தாக்குதலை தொடுத்தார்கள் பலம் வாய்ந்தவர்கள், பலஹீனமானவர்கள், சிறுவர்கள் என பல தரப்பு மக்களும் நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார்கள். அடிப்பதை பார்த்தல் கல் நெஞ்சமும் கரையும் ஆனால் மக்களில் பெரும்பான்மையினர் எதிர்கொண்டு துணிச்சலாக நின்றார்கள். அதுவும் அவர்களின் திட்டத்திற்கு எதிராக அமைந்தது. அனைவரையும் ஓட விடுவோம் மிஞ்சிய குறைவான மக்களை பலிதீர்க்கலாம் என எண்ணிய அவர்களின் கனவு ஸ்தம்பிச்சு நின்றது.

அசாதாரண சூழ்நிலையில் ஏற்படுத்தும் விளைவுகள் காலம் நமக்கு தந்த பாடம் மக்கள் கோபத்தாலும், உணர்ச்சி வசப்படுதலாலும், பீதியாலும் வன்முறை வெடிப்பது வழக்கம். 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் சங்கமித்துள்ள இடத்தில் பஸ் நிறுத்தம் இல்லை,
ஆட்டோக்களும்,பொதுமக்களின் வாகனங்களும் இலகுவாக சென்று வருகிறது. அந்தப் பாதையில் கடைகள் நிறைந்துள்ளது சின்ன சேதத்தைக் கூட கலந்து கொண்ட மக்கள் ஏற்படுத்தவில்லை என்றால் அரசு இயந்திரங்களும், அரசியல்வாதிகளும், சமூக பொறுப்பாளர்களும் இவர்கள் யார் ? என மீட்டுப்பார்க்க வேண்டும். நிச்சயமாக தெரிந்துகொள்வீர்கள் மக்கள் செல்லும் வழியில் இடையூறாக சிறு கற்கள் இருந்தால் கூட அவற்றை அகற்றுவது தர்மம் என்று சொல்லும் நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றுபவர்கள் என்பதை.

யார் பதட்டத்தை கட்டுப்படுத்தினார்கள் ? காவல்துறையா ! நிச்சயமாக இல்லை அவர்கள் தான் கலவரத்தை ஏற்படுத்தினார்கள். பாப்புலர் ஃப்ரண்டில் பிரதானப் பதவி செயல்வீரர் என்ற அந்தஸ்து தான். அவர்கள் அனைவரும் இணைந்து காவல்துறை தாக்கியபோது தாங்கள் முன்னணியில் நின்று உடல்களை கேடயமாக ஆக்கிகொண்டும், அக்கிரம்மத்தை கண்டு அவேசப்பட்டவர்களை கட்டுப்படுத்தவும் செய்தார்கள். அப்பொழுது காவல்துறை தாக்குதலுக்குள்ளான செயல்வீரர் மயக்கமுற்று சரிந்தான் மருத்துவமனையில் மயக்கம் தெளிந்த போது அணிவகுப்பு நடந்ததா ? என்ற கேள்வியுடன் விழித்தது நெஞ்சை பிழிந்தது. இவ்வாறு பல நிகழ்வுகள் உண்டு இவர்களின் இதைபோன்ற நியாயமான வேற்கைக்கு இன்ஷா அல்லாஹ் சரித்திரம் பதில்சொல்லும்.

மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைய வந்த நம்மை வன்முறைதான் உங்களின் அடையாளம் என்ற சித்தரிப்பை உருவாக்குவதற்கான முயற்சி தான் இச்சம்பவத்தின் சதியின் நோக்கம். எனவே முஸ்லிம்களின் நியாயமான போராட்டங்களையும், மாநாடுகளையும் திரிக்கும் சூழ்நிலையில் அறிவுசார்ந்து யோசித்து நடப்பது தான் சரி என்பதை மக்களிடம் சமர்ப்பித்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ! காவல்துறையின் பலப்பிரயோகம் ஒரு காலும் தீர்வாகாது.

முஸ்லிம் விரோதப் போக்கு, சட்டத்திற்கு எதிரான அணுகுமுறை, கொலைவெறி தாக்குதல் இவைகளுக்கு எதிரான நோட்டீஸ்,போஸ்டர் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், சட்டப்போராட்டம் என நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் இன்ஷா அல்லாஹ் !

இப்படிக்கு

ஏ.எஸ்.இஸ்மாயில்,
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்,
தமிழ்நாடு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza