Thursday, February 20, 2014

பாப்புலர் பிரண்ட் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் 100 சதவீதம் திட்டமிட்ட சதி : முழு விவரத்தின் தொகுப்பு....!!


பாப்புலர் பிரண்ட் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் 100 சதவீதம் திட்டமிட்ட சதி : முழு விவரத்தின் தொகுப்பு....!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தினர் ராமநாதபுரத்தில் அணிவகுப்பு நடத்திய நேரத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் மிருகவெறி தாக்குதல் நடத்தி பல முஸ்லிம்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் PFI இயக்கத்தினர் காவல்துறையின் அனுமதி இல்லாமல் அணிவகுப்பு நடத்தியதால் தடியடி நடத்தப்பட்டதாக சில முஸ்லிம்கள் செய்தி பரப்பி வருகிறார்கள்.

இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான தகவலாகும்.

நடந்தது என்ன ???


ஜனவரி 17 :

ராமநாதபுரத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதி நடக்கவிருக்கும் பேரணிக்கு ஜனவரி 17 ஆம் தேதி, அதாவது சரியாக ஒரு மாதத்திற்கும் முன்பு பேரணிக்கான அனுமதி கேட்டு காவல்துறையினரிடம் PFI சார்பில் மனு கொடுக்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருக்குமேயானால் அதனை காரணமாக வைத்து ஜனவரி 17 ஆம் தேதியே பேரணிக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று அதே தினத்தில், மனு கொடுக்கும் போதே சொல்லியிருக்கலாம்.

அவ்வாறு சொல்லியிருந்தால் அவர்கள் வேறு மாவட்டங்களை நோக்கி சென்றிருப்பார்கள்.

சரி, சரி என்று தலையை ஆட்டிக்கொண்டு மனுவை பெற்று கொண்டு காவல்துறையினர் இருந்து விட்டனர்.

அதன்பிறகு ஒவ்வொரு ஊராக முகாம் (Camp) போடப்பட்டு PFI இயக்கத்தினர் அணிவகுப்புக்கு ஆயத்தமாகினர்.

பல்வேறு மாவட்டங்களில் இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில்....

மனுவை பெற்றுக்கொண்டு சரியாக 26 நாள் கழித்து, அதாவது அணிவகுப்புக்கும் 4 நாட்களே எஞ்சி இருக்கும் நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்த இடத்தில் நமது கேள்வி....

ஜனநாயக நாட்டில் ஒரு இயக்கம் பேரணியோ அல்லது பொதுக்கூட்டமோ நடத்த அனுமதி கேட்டால், அனுமதி கொடுத்து, பாதுகாப்பு கொடுப்பது தான் காவல்துறையின் கடமை.

அது இடத்தில் மீறப்பட்டது ஏன் ?

ராமநாதபுரம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருக்குமேயானால் அதை ஏன் முதல் நாளிலோ அல்லது அடுத்த சில தினங்களில் சொல்லவில்லை ?

அந்த நேரத்தில் அணிவகுப்புக்கு அனுமதி பெற வேண்டும் என்பதற்காக PFI வழக்கறிஞர் பிரிவினரால் நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுகிறது.

இங்கு தான் காவல்துறையினருக்கு கௌரவ பிரச்சினை உருவாகிறது.

நீதிமன்றம் வரை பிரச்சினை சென்று விட்டதால் மறுபரிசிலனை செய்ய சொல்லி காவல்துறைக்கு மனு கொடுங்கள் என்று அதே காவல்துறையினரால் மறைமுகமாக ஆலோசனை சொல்லப்படுகிறது.

ஆகையால் PFI மாவட்ட நிர்வாகத்தினரால் மறுபரிசிலனை செய்வதற்காக மீண்டும் காவல்துறைக்கு மனு கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில்....

பேரணிக்கும் முதல் நாள் அதாவது பிப்ரவரி 16 ஆம் தேதி....

பேரணிக்கும், பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி அளிக்கிறோம் என்று காவல்துறையினர் PFI மாவட்ட நிர்வாகத்திற்கு எழுத்து மூலமான அனுமதி கடிதம் கொடுக்கிறார்கள்.

அந்த கடிதத்தில்....

பேரணிக்கும், பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி அளிக்கிறோம், மேலும் பேரணியின் போது ராணுவம் மற்றும் காவல்துறையினர் பயன்படுத்தும் சீருடை பயன்படுத்த கூடாது. பேரணியின் போது கையிலே எந்த வகையான ஆயுதமும் ஏந்தி செல்ல கூடாது என்று அந்த அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

ராணுவம் மற்றும் காவல்துறையினர் அணிய கூடிய சீருடை தான் அணிந்து செல்ல கூடாது என்று சொன்னார்களே தவிர...

சீருடைய அணியக்கூடாது என்று சொல்லவே இல்லை.

மேலும் PFI இயக்கத்தினருக்கு என்றே ஒருவகையான சீருடை இந்தியா முழுவதும் இருக்கிறது.

அந்த சீருடை காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் சீருடையின் தோற்றம் கொண்டதே அல்ல...

ஆகையால் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் இயக்கம் என்பதால் அமைதியான முறையில் பேரணிக்கு ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழுமினர்.

இந்நிலையில்....

திடீரென வருகை தந்த காவல்துறை டிரம்ஸ் வாசிக்க கூடாது என்று புதிய ரூட்டை போட்டனர். (இது காவல்துறை கொடுத்த அனுமதி கடிதத்தில் சொல்லாத விஷயம்)

PFI இயக்கத்திற்கும், காவல்துறையினருக்கும் அந்த நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்த நேரத்தில் காவல்துறைக்கு இன்ஃபார்மராக இருக்கும் சில நபர்கள் காவல்துறையினர் மீது அவர்களின் திட்டப்படி கற்களை வீச...

இதையே சாக்காக வைத்து PFI இயக்கத்தினர் மீது கொடூர வெறியில், மிருகவேறியோடு கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

அந்த தாக்குதலின் போது குறிப்பாக நீதிமன்றத்தை நாடிய PFI வழக்கறிஞர்களை குறிவைத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது தான் நமக்கு புரிகிறது...

இந்த தடியடியே காவல்துறையினரின் திட்டமிட்ட தாக்குதல் என்று...

நாம் கேட்கும் கேள்வி என்னவென்றால்....

சாதாரண பேரணிக்கு பாதுகாப்புக்கு காவல்துறையினர் வந்துள்ளனர் என்றால்...

1. நூற்றுக்கனக்கான அதிரடிப்படை அங்கே குவிக்கப்பட்டது எப்படி ?

2. வஜ்ரா வாகனத்தை கொண்டு வந்தது ஏன் ?

3. கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு வந்தது ஏன் ?

4. ரப்பர் குண்டுகளுடன் கூடிய துப்பாக்கிகளை கொண்டு வந்தது ஏன் ?

காவல்துறை சொன்னது போல் எந்த சிறுமாற்றமும் இல்லாமல் பேரணிக்கு முஸ்லிம்கள் வந்ததால்...

காரணம் இல்லாமல் தடியடி நடத்த முடியாது என்பதால் காவல்துறையினர் திட்டமிட்டதுபோல் காவல்துறையின் கை கூலிகள் கற்களை வீசி அதை காரணமாக வைத்து முஸ்லிம்கள் மீது வரலாறு காணாத தடியடி நடத்தியுள்ளனர்.

சாதாரண பேரணிக்கு அதாவது பெண்கள் கலந்து கொண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் மேற்கண்டவைகளை எப்படி எடுத்து வந்தார்கள் ?

காவல்துறையினர் இந்த பேரணியை நடத்த விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தனர். அதை ஜனநாயக ரீதியில் தடுக்க முடியாது என்பதால் கலவரம் போன்ற நிலையை திட்டமிட்டு உருவாக்கி அவர்கள் விரும்பியது போல் நடந்து கொண்டனர்.

இது எதார்த்தமாக நடந்த தடியடி அல்ல, மாறாக காவல்துறையினர் திட்டமிட்டு நிகழ்த்திய ஒரு இனத்திற்கு எதிரான வன்முறை வெறியாட்டம் ஆகும்.

இது தான் நடந்த சம்பவம்.

இதை புரிந்து கொள்ளாமல் PFI இயக்கத்தினர் மீது வசைபாடி வருவது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்....

முஸ்லிம் என்பவன் ஒரு உடலை போன்றவன், உடலின் ஒரு பாகம் பாதிக்கப்பட்டால் மற்ற பாகங்கள் துடிக்க வேண்டும்.

ஆகையால் நமது சொந்தங்கள் மிருகவெறி தாக்குதலுக்கு உள்ளாகி ராமநாதபுரத்தில் நிர்மூலமாக்கப்பட்ட நிலையிலும் ஒருவரை ஒருவர் வசைபாடுவது நல்லது போல் தெரியவில்லை.

எனது அருமை முஸ்லிம் சமுதாயமே....

நமக்கு எதிரி எவனோ இல்லை நமது நாக்கு தான் என்று நினைக்க வைத்து விடாதீர்கள்.

Thanks to சங்கை ரிதுவான்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza