ஹிந்துத்துவாவின் பெயரால் வாக்கு சேகரிப்பது தவறல்ல என்று முன்பு அளித்த தீர்ப்புக் குறித்து உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்கிறது. 1995-ஆம் ஆண்டு ஹிந்துத்துவம் என்பது கலாச்சாரம் என்றும் அதன்பெயரால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பது தவறல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக பல தடவைகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இவ்வழக்கில் விசாரணை நடத்த ஏழு உறுப்பினர்களை கொண்ட அமர்வை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .ஹிந்துத்துவம் அல்லது ஹிந்துயிசம் என்பது இந்திய துணைக் கண்டத்தில் மக்களின் வாழ்க்கை நெறி. அது மக்களின் உள்ளங்களில் உள்ள உணர்வு என்று இவ்வழக்கில் நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறியிருந்தார்.
1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123-பிரிவின் துணைப்பிரிவு (3) ஐ விமர்சித்து ஜே.எஸ்.வர்மா தீர்ப்பு அளித்திருந்தார்.மஹராஷ்ட்ரா சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ரத்து செய்தை எதிர்த்து 1992-ஆம் ஆண்டு பா.ஜ.கவின் அபிராம் சிங் சமர்ப்பித்த மனுவில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த மாதம் 30-ஆம் தேதி இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத்தின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அமர்வின் பரிசீலனைக்கு அளித்தது.
- Thoothu online.com
0 கருத்துரைகள்:
Post a Comment