இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதை கண்டித்தும்,இந்த மாநாட்டிற்கு இந்திய அரசின் சார்பில் பிரதமர் உட்பட எந்த பிரதிநிதியும் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட எஸ்டிபிஐ(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் பரமக்குடியில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர்கள் சோமு,ஃபைரோஸ்கான்,செயலாளர்கள் அப்துல் ஜமீல்,செய்யது இப்றாஹிம்,பொருளாளர் செரீஃப் சேட்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நவாஸ்கான், அப்துல் வஹ்ஹாப், எஸ்டிடியூ தொழிற்சங்க மாநில பொருளாளர் கார்மேகம்,
பரமக்குடி தொகுதி தலைவர் பி.எஸ்.ஐ.கனி, துணைத்தலைவர் சீதக்காதீர்,இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் அப்பாஸ் அலி ஆலிம்,செயலாளர் சேகு இப்ராஹிம்,திருவாடானை தொகுதி தலைவர் ஜஹீருதீன்,செயலாளர் ரியாஸ் அகமது,முதுகுளத்தூர் தொகுதி தலைவர் முஹம்மது இஸ்ஹாக்,செயலாளர் ஹாஜா,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வடக்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா,செயலாளர் அப்துல் நாசர்,வர்த்தக அணி மாவட்ட தலைவர் அஸ்கர், எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயமுருகன்,
நகர் தலைவர் அப்துல்லா சேட்,துணைத்தலைவர் சகுபர் சாதிக்,இணைச்செயலாளர் யாசர் அரஃபாத்,பொருளாளர் செய்யது இப்றாஹிம் மற்றும் தொகுதி,நகர,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பேரணியாக சென்று மாலை 4 மணி அளவில் ராமேஸ்வரம் –திருச்சி பாசஞ்சர் ரயிலை பரமக்குடி இரயில் நிலையத்தில் மறித்து ஆர்ப்பாட்டம் செய்த 150க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment