Thursday, November 7, 2013

யாசர் அராஃபத் படுகொலை - திடுக்கிடும் தகவல் அம்பலம்!

பாரிஸ்: பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன விடுதலைக்காக தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தி போராடி, பின்னர் ஆயுதத்தைக் கைவிட்டு அஹிம்சை வழியில் பயணித்த யாசர் அராபத் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி தனது 75-வது வயதில், பிரான்ஸ் நாட்டில் இறந்தார். அவர் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டாலும் அவருடைய மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அப்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.


இந்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் யாசரின் உடற்பகுதியில் எஞ்சியிருந்த பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்தச் சோதனைகளின் முடிவில், அராபத்திற்கு கதிர்வீச்சு தன்மை வாய்ந்த பொருளைக் கொடுத்து அவர் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.
பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளிலும் இந்தச் சோதனைகள் தனித்தனியே நடந்தன.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள லுசேன் சட்ட மருத்துவ மையத்தின் கதிரியக்கப் பிரிவில் பணிபுரியும் எட்டு விஞ்ஞானிகள் அவரது உடலில் எலும்பு, ரத்தம், சிறுநீர் கறைகள் பட்டிருந்த துணிகளில் போலோனியம்-210 என்ற உயர் கதிர்வீச்சு தன்மையுடைய பொருள் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். மேலும், யாசர் அராஃபத் உடலில் சராசரி அளவைவிட 18 மடங்கு அதிகமாக போலோனியம் கதிர்வீச்சு பாதிப்பு இருந்ததும் மருத்துவக் குழுவின் சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza