தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கப்போகும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
மேலும் அத்திட்டத்தை பழைய வழித்தடத்திலேயே செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையேயான கடல் பகுதியில் இருப்பதாக கூறப்படும் ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்கக்கோரியும், தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு மத்திய அரசு நேற்று பதில் அளித்துள்ளது. அதில், சேது திட்டத்தை பழைய வழித்தடத்திலேயே நடைமுறையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2004-2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்துக்கு இதுவரை ரூ.766 கோடி செலவு ஆகியுள்ளது. திட்டத்தை செயல்படுத்தினால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்கப்பட இயலாது என்றும் கூறியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சுதான்ஷூ ஜோதி, முகோபாத்யாய ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
Info : Newindia.tv
0 கருத்துரைகள்:
Post a Comment