Tuesday, September 10, 2013

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: கலெக்டர் நந்தகுமார் அறிவிப்பு

இமானுவேல்சேகரன் நினைவு தினம், தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு கலெக்டர் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இன்று முதல் 144 தடை உத்தரவு அமுலுக்கு வருவதால் இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இன்று (9–ந்தேதி) முதல் 15–ந்தேதி வரையும், அக்டோபர் 25–ந்தேதி முதல் 31–ந்தேதி வரையும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உள்பகுதிகளில் இருந்தும் இமானுவேல்சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை போன்றவற்றுக்கு வாடகை வாகனங்களில் வரவும் தடைவிதிக்கப்படுகிறது.
இதேபோல் நினைவு ஜோதி எடுத்துவரவும் அனுமதி கிடையாது. அதே நேரத்தில் நினைவிடங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ஜோதி எடுத்து வரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza