‘ஜெய் நரேந்திர மோடி’ கோஷம் எழுப்ப மறுத்த மாணவர்களை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற சங்க்பரிவார மாணவர் அமைப்பினர் தாக்கியுள்ளனர்.
ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா (எஃப்.டி.ஐ.ஐ) மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கபீர் கலா மஞ்ச் என்ற சமூக கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் முடிந்த உடன் இத்தாக்குதல் நடந்துள்ளது.
கபீர் கலாமஞ்சிற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
எஃப்.டி.ஐ.ஐ யைச் சார்ந்த மாணவர் அஜயன் அட்டாட்டிடம், ஏ.பி.வி.பி குண்டர்கள், ‘ஏன் கபீர் கலா மஞ்சை நிகழ்ச்சிக்காக அழைத்தீர்கள்? உங்களது அரசியல் கட்சி எது? என்று கேள்வி எழுப்பி அவரை தாக்கியுள்ளனர்.
அஜயன் அட்டாட், ‘நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. நான் ஒரு கலைஞன்’ என்று தெரிவித்துள்ளார்.
அப்பொழுது ஏ.பி.வி.பி குண்டர்கள், ‘நீ மாவோயிஸ்ட் இல்லையெனில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ‘ஜெய் நரேந்திர மோடி’ கோஷம் போடு என்று வற்புறுத்தினர். அதற்கு அஜயன் மறுக்கவே ஏ.பி.வி.பியினர் கும்பலாக சேர்ந்து தன்னை தாக்கியதாக அஜயன் கூறுகிறார்.
ஏ.பி.வி.பி குண்டர்களின் தாக்குதலில் எஃப்.டி.ஐ.ஐயில் இதர நான்கு மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
ஏ.பி.வி.பி குண்டர்கள் மாணவர்களை தாக்கும் வேளையில் அதனை தடுக்க மஃப்டியில் இருந்த போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எஃப்.டி.ஐ.ஐ மாணவர் அசோசியேஷன் குற்றம் சாட்டுகிறது.
இச்சம்பவத்தை கண்டித்து பேரணி நடத்த எஃப்.டி.ஐ.ஐ மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Info: Newindia.tv
0 கருத்துரைகள்:
Post a Comment