Monday, August 26, 2013

‘ஏழைகள் நெருங்க முடியாத அளவுக்கு வணிக மயமாகிவிட்டது சட்டத் தொழில்!’ - உச்சநீதிமன்றம்!

சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றங்களுக்கு ஏழைகள் நெருங்க முடியாத அளவுக்கு வழக்கறிஞர் என்ற சட்டத் தொழில் அமைந்துவிட்டது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராக வக்கீல் ஒருவர் கையெழுத்திட்டு விட்டு, அதன்பின்னர் ஒரு முறைகூட அந்த வழக்கில் ஆஜராகவில்லை. இதை கண்டித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

‘ஒருகாலத்தில் மேன்மையாக கருதப்பட்ட சட்டத் தொழில் இன்று அது வணிகமயமாகி விட்டது. நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வது என்பது அதிக செலவு பிடிக்கின்ற ஒன்றாகி விட்டது. இதனால் ஏழைகளால் நெருங்க முடியாத அளவுக்கு அது சென்று விட்டது.
வழக்கு தொடுத்தவரின் வாழ்நாளில் ஒரு வழக்கு விசாரணை முடிந்து இறுதிக்கட்டத்தை அடைந்து விடாது, வழக்கு தொடுத்தவரின் விதியை ஒரு ஜோதிடரால்கூட கணித்து கூறி விட முடியாது என்றெல்லாம் நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது. நீதி நிர்வாகம் செய்வதில் நீதிபதிகளை போன்று வக்கீல்களுக்கும் சம பங்கு உள்ளது. 
சட்டம் வணிகம் அல்ல. வக்கீல் என்பவர் ஒரு நீதிமன்றத்தின் அதிகாரி. நீதிமன்றத்தை சுமுகமாக இயங்கச்செய்கிற கடமை அவருக்கு உண்டு. துயரத்தில் இருக்கிற மனிதருக்கு அவர் புத்துயிர் அளிக்க வேண்டும். உதவி செய்ய ஆளற்ற அப்பாவி வழக்குதாரரின் நிலையை வணிக ரீதியில் தனக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது.’ இவ்வாறு உச்ச நீதிமன்றம் தனது கருத்தை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza