Sunday, August 11, 2013

‘துர்கா சக்தி நாக்பாலால் இடிக்கபட்ட மஸ்ஜிதை கட்டிய பிறகே ஈத் பெருநாளை கொண்டாடுவோம்’ - கிராம மக்கள்!

கடந்த ஒன்பது ஆண்டுகளாக சேமித்த பணத்தைக் கொண்டு கட்டிய மஸ்ஜிதை சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் இடித்துத் தள்ளியுள்ளார். புதிய மஸ்ஜிதை கட்டாதவரை நாங்கள் ஈத் பெருநாளை கொண்டாடமாட்டோம்’
என உத்தரபிரதேசம்-ஹரியானா மாநில எல்லையில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ள காதல்பூர் கிராமத்தைச் சார்ந்த முஹம்மது இஸ்மாயீல் கூறுகிறார்.

மணல் மாஃபியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார் என்று தேசிய ஊடகங்கள் புகழ்ந்து தள்ளிய துர்கா சக்தி நாக்பால் தான் கடந்த ஜூலை 27-ஆம் தேதி மஸ்ஜிதை இடித்துத் தள்ளியுள்ளார்.
வீடுகளில் வர்ணம் பூசியும், இனிப்பை விநியோகித்தும், புத்தாடைகளை அணிந்தும் ஒவ்வொரு வருடமும் இக்கிராமவாசிகள் ஈத் பெருநாளை கொண்டாடுவர். ஆனால், இம்முறை அவ்வாறு செய்யவில்லை என்று கிராம தலைவர் ஷஃபீக் கான் கூறுகிறார்.
மஸ்ஜிதை கட்டினால் மட்டுமே இனி ஈத் பெருநாளை கொண்டாடுவோம் என்று அவர் தெரிவிக்கிறார்.
மஸ்ஜிதை இடித்தது வகுப்புக் கலவரத்தை உருவாக்கும் என்று கூறி உத்தரபிரதேச மாநில அரசு துர்கா சக்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இவரது சஸ்பெண்ட் நடவடிக்கை மத்திய-மாநில அரசுகளுக்கிடையே கடுமையான அறிக்கைப் போரை உருவாக்கியது. மணல் மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த துர்கா சக்திக்கு எதிராக உ.பி மாநில அரசு காய் நகர்த்துவதாக ஊடகங்கள் குற்றம் சாட்டின. அதேவேளையில் வகுப்புக் கலவரத்தை தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்க தயார் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதிப்பட தெரிவித்திருந்தார்.
அதேவேளையில் சட்டவிரோதமாக மஸ்ஜிதை கட்டியதால் கிராமவாசிகளே மஸ்ஜிதை இடித்ததாக மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், மஸ்ஜிதை இடிக்கும்போது துர்கா சம்பவ இடத்தில் இருந்தார் என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.
ஜூலை 27-ஆம் தேதி காலை 9 மணிக்கும் 10க்கும் இடையே அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எக்ஸ்கவேட்டர்களுடன் அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அடங்கிய ஒரு குழுவினர் கிராமத்திற்கு வந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் வகுப்புக் கலவரங்களுக்கு தலைமையேற்று முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட பி.ஏ.சி என அழைக்கப்படும் ப்ரொவிஷனல் ஆர்ம்ட் கான்ஸ்டாபுலரி படையினரும், ஆம்புலன்சும் வந்தன.12 மணியளவில் துர்கா சக்தியும் அங்கு வந்துள்ளார். மஸ்ஜிதை இடிக்காதீர்கள் என்று கிராம பெரியவர்கள் கோரிக்கை விடுத்த பிறகும் துர்கா மறுத்துவிட்டார். தொடர்ந்து மஸ்ஜிதை இடித்துத் தள்ள கிராமவாசிகளிடம் கூறியுள்ளர். ஆனால், அவர்கள் மறுத்துவிடவே போலீஸாரை அனுப்பி மஸ்ஜிதை இடித்துத் தள்ளியுள்ளார்.
ரமலான் கழிந்த பிறகு ஆவணங்களை சமர்ப்பிக்கிறோம் என்று கிராமவாசிகள் கூறிய பிறகும் துர்கா ஒப்புக்கொள்ளவில்லை. கிப்லாவின் பக்கத்தில் உள்ள சுவரை இடித்துத் தள்ளிய போலீஸ், மேலேக் கட்டியிருந்த தார்பாயை கிழித்தெறிந்துள்ளது. ஒழு (உடல் உறுப்புக்களை சுத்தம் செய்தல்) செய்ய தண்ணீர் தேக்கிவைத்திருந்த டாங்கையும் உடைத்தெறிந்துள்ளனர்.
மஸ்ஜிதை இடித்த தகவலை அறிந்து அருகில் உள்ள கிராமத்தில் உள்ள மக்கள் திரண்டுள்ளனர். மக்கள் கொந்தளித்த போதும் பெரியவர்கள் அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.
5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கிராமத்தில் ஆக ஒரு மஸ்ஜிதே உள்ளது. இதனைத் தொடர்ந்துதான் கிராம சபைக்கு சொந்தமான தரிசாக கிடந்த நிலத்தில் இன்னொரு மஸ்ஜிதை கட்டுவதற்கு 1982-ஆம் ஆண்டு தீர்மானித்து இதனை கட்டியுள்ளனர் கிராமவாசிகள்.

Info: newindia.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza