இந்தியாவின் 67–வது சுதந்திர தின விழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இந்த வருடம் “சுதந்திரத்தின் காவலாளிகளாவோம் ” என்ற முழக்கத்தை முன் வைத்து நாடு முழுவதும் சுதந்திர தின கூட்டங்களையும், தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது. அதன் படி தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தினம் உற்சாகமாக கடைபிடிக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக புதுவலசையிலும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவலசை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோ. ஹமீது இப்ராஹிம் கலந்து கொண்டு கொடியேற்றினார். இதனை தொடர்ந்து பனைக்குளம், அழகன்குளத்திலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
அழகன்குளம் பேருந்து நிலையத்தில் கொடி ஏற்றுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து தனியாருக்கு சொந்தமான இடத்தில் கொடியேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோ. ஹமீது இப்ராஹிம், SDPI மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோ.ஸஹர்தீன், திருவாடனை ஒன்றிய செயலாளர் சகோ. ரியஸ் அஹமது, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பனைக்குளம்
0 கருத்துரைகள்:
Post a Comment