Thursday, August 15, 2013

இஸ்லாமிய வங்கியல் குறித்து தேர்தல் அறிக்கையில் உட்படுத்தவேண்டும் – ரஹ்மான் கான்

புதுடெல்லி:இஸ்லாமிய வங்கியல் குறித்து அடுத்த மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் உட்படுத்தவேண்டும் என்று மத்திய அமைச்சர் ரஹ்மான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியிடம் ரஹ்மான் கான் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பது:

வட்டியில்லா வங்கி முறை முஸ்லிம்களிடமிருந்து மூலதனத்தை சேகரிக்க உதவும்.இதன் மூலம் சமுதாய நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.சிறப்பு சட்டம் உருவாக்கி அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு இதனைச் செய்ய முடியும் என்று ரஹ்மான் கான் கூறியுள்ளார்.
இஸ்லாமிய வங்கியல் முறையை கொண்டுவர வங்கியல் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னர் கூறியிருந்தது.

Source: thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza