Wednesday, August 21, 2013

வக்ஃப் சட்டத்திருத்தம்: வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் - மத்திய அமைச்சர் ரஹ்மான் கான்!



வக்ஃப் நிலத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தினால் வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து முஸ்லிம்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு இத்தொகை போதுமானது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். வக்ஃப் ஆக்கிரமிப்பை தடுக்கவும், வக்ஃப் நிலத்தை வர்த்தகரீதியாக பயன்படுத்தவும் நோக்கமாக கொண்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றிய பிறகு அவர் உரையாற்றினார்.

1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் வக்ஃப் திருத்த மசோதா 2010, வக்ஃப் நிறுவனங்களை வலுப்படுத்தவும், அவற்றின் செயல்பாடுகளை வரிசைப்படுத்தவும் சிபாரிசுகள் அடங்கியதாகும்.
வக்ஃப் சொத்துக்களை விற்பது, தானம் அளிப்பது, அடமானம் வைப்பது ஆகியவற்றை தடைச் செய்யும் மசோதா, கல்வி, சுகாதார, வர்த்தக திட்டங்களுக்கு 30 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுப்பதற்கு அனுமதி வழங்குகிறது.
சி.பி.எம் மற்றும் பா.ஜ.கவின் எதிர்ப்பையும் மீறி 3 வருட குத்தகை கால அளவு 30 வருடங்களாக உயர்த்தப்பட்டது. நிலத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதற்காக குத்தகையின் கால அளவு 30 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.
இம்மசோதா கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.ஆனால், 2010 ஆகஸ்ட் 27-ஆம் தேதி மாநிலங்களவையின் பரிசீலனைக்கு வந்தபோது முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் வலுவாக எதிர்த்ததைத் தொடர்ந்து செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. முஸ்லிம் அமைப்புகள் பரிந்துரைத்த பல்வேறு சிபாரிசுகளை உட்படுத்து புதிய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மாற்றங்களை மக்களவை மீண்டும் அங்கீகரிக்கவேண்டும்.
இம்மசோதா மூலம் மத்திய அரசுக்கு மாநில வக்ஃப் போர்டுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் கிடைக்கும் என்றும், அதனை கடைப்பிடிக்க மாநில வக்ஃப் போர்டுகளுக்கு நிர்பந்தம் ஏற்படும் என்றும் ரஹ்மான் கான் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சட்டத்தின் படி மாநில வக்ஃப்போர்டுகள் சரியாக செயல்படவில்லை என்பதை ரஹ்மான் கான் ஒப்புக்கொண்டுள்ளார்.
வக்ஃப் சொத்துக்களின் சர்வே முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து சர்வே பணிகளும் ஒரு வருடத்திற்குள் பூர்த்தியாகும். மாநில அரசுகள் ஒரு சர்வேயரை இதற்காக நியமிக்கவேண்டும் என்று ரஹ்மான் கான் கூறியுள்ளார். 10 வருடம் கழியும்போது மீண்டும் சர்வே நடத்தவேண்டும்.
ஏராளமான வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படவோ, குறைந்த தொகைக்கு குத்தகைக்கோ விடப்பட்டுள்ளது. வக்ஃப் ஆக்கிரமிப்பு ஜாமீன் இல்லாத குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமிப்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். அத்துடன் குறிப்பிட்ட கால அளவில் ஆக்கிரமிப்பை மீட்க தயாராகாத அதிகாரிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க சட்டத்தில் பிரிவு உள்ளது.
source: New india.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza