இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேருடைய போலி என்கவுண்டர் சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொண்டுவந்த சிபிஐக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இது போன்ற பாரபட்சமற்ற விசாரணை கண்டிப்பாக மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்தும். இது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றாலும் மாநில அரசு மற்றும் ஐ.பி.(Intelligence Bureau)யை சார்ந்த சில குற்றவாளிகளின் பெயர்களை இன்னும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கவில்லை. இன்னும் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளின் பெயர்களும் விரைவில் வெளியிடப்படும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment