Saturday, July 6, 2013

ஜனாதிபதி முர்ஸி வெளியேற்றம் : அரபுலக ஜனநாயகத்திற்கு பின்னடைவு! - பாப்புலர் ஃப்ரண்ட்

எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக ரீதியில் தேந்தெடுக்கப்பட்ட எகிப்து ஜனாதிபதியை இராணுவத்தைக் கொண்டு வெளியேற்றியது மிகவும் கவலைக்குரியது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தெவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில் "ஹாஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்டதிலிருந்து, அதிகாரத்தை மோசமான முறையில் தவறவிட்ட முபாரக்கின் விசுவாசிகளான இராணுவ தலைவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டமிட்ட சதி இது என்பதே உண்மை. ஜனாதிபதி முஹம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்ததும், அரசியலமைப்பை இடைநீக்கம் செய்ததும் எகிப்திற்கு மட்டுமல்ல அரபுலக ஜனநாயக முறைக்கே பின்னடைவாக அமைந்துள்ளது.



எகிப்தில் மீண்டும் ஜனநாயகத்தை கொண்டுவரவும், ஜனாதிபதியாக சட்ட ரீதியாக தேந்தெடுக்கப்பட்ட முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்தவும் இந்திய அரசாங்கம் எகிப்திய இராணுவத்திற்கு  தூதரகம் மூலம்  அழுத்தம் கொடுக்க  வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza